பதிவு செய்த நாள்
27
மே
2013
11:05
ஊத்துக்கோட்டை: பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நடந்த, 14ம் ஆண்டு திருவிளக்கு பூஜையில், திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஊத்துக்கோட்டையில் இருந்து, ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி கிராமம். இங்கு பள்ளிகொண்டேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், சிவபெருமான் உலகை காக்க வேண்டி, ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதி தேவி மடியில் தலை வைத்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நேற்று முன்தினம் இரவு, 14ம் ஆண்டு திருவிளக்கு பூஜை கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்ச்சியில், 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு, விளக்கிற்கு விசேஷ பூஜைகள் செய்தனர்.முன்னதாக, மரகதவல்லி தாயார், வால்மீகீஸ்வரர், ராமலிங்கேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் மதுரெட்டி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.