குன்னூர்: குன்னூர் மாடல் ஹவுஸ் மாசாணி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பூ குண்டத்தில், திரளான பக்தர்கள் பங் கேற்று, நேர்த்திக் கடன் செலுத்தினர்.குன்னூர் மாடல் ஹவுஸ் ஸ்ரீ மாசாணியம்மன் கோவிலின் 9வது ஆண்டு விழா, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பூச்சாட்டுதல், திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்த நிலையில், நேற்று முன்தினம் காலை, பூ குண்டம் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, பூ குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். மதியம் அன்னதானம் நடந்தது. இரவு அலங்கார தேரில், அம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.