விழுப்புரம்: மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் இன்று மகா கும் பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து ஹோமம், யாகசாலை பிரவேசம், நவக்கிரக ஹோமம், அர்ச்சனை பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.இன்று (29ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு கணபதி பிரார்த்தனை, யாகசாலை பூஜை, கலச அர்ச்சனை நாடிசந்தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. பின்னர் காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.