தென்காசி தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2013 11:05
தென்காசி: தென்காசி அருகேயுள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. தென்காசி ஆயிரப்பேரி ரோட்டில் உள்ள ராஜகுரு தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா நேற்று நடந்தது. மாலை 6.45 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியானார். இதைமுன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு சிறப்புஅபிஷேக ஆராதனைகள் நடந்தது. விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம், பூர்ணாகுதி, மகா அபிஷேகமும்,தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது. மாலை5.30 மணிக்கு புஷ்பாஞ்சலி, இரவு 8 மணிக்கு தீபாராதனை நடந்தது.ஏற்பாடுகளை சுவாமி ஐயப்ப சாது மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.