பதிவு செய்த நாள்
30
மே
2013
10:05
திருச்சி: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், முதல்வர் ஜெயலலிதா சாமி தரிசனம் செய்தார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா, தனிப்பட்ட பயணமாக மாலை 4.50 மணிக்கு ஸ்ரீரங்கம் வந்தார். ரங்கா ரங்கா கோபுரம் வழியாக கோயிலுக்கு வந்த அவருக்கு, ரங்கநாத பட்டர் மற்றும் நந்து பட்டர் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்தனர். பின்னர் கோயிலுக்குச் சென்ற அவர், சக்கரத்தாழ்வார், தாயார் மற்றும் மூலவரை தரிசித்தார். சாமி தரிசனத்திற்குப்பின் வெள்ளை கோபுரம் வழியாக வெளியே வரும் ஜெயலலிதா, அங்கிருந்து அகோபில மடம் சென்று 46வது அழகிய சிங்கர் சாமிகளை சந்தித்து ஆசி பெறுகிறார்.
மக்கள் மகிழ்ச்சி: முதல்வர் ஜெ., ஸ்ரீரங்கம் வந்த போது, மழை பெய்ததால் பொதுமக்களும், அ.தி.மு.க., தொண்டர்களும் பெருமகிழ்ச்சியடைந்தனர்.