Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவானை நினைத்தால் பூர்ண நிலை தாமோதர ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காக்கும் கடவுள் செவளாபுரி அம்மன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2013
10:05

தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த கோவில்களை கொண்ட கொங்கு மண்டலம், முற்காலத்தில் 24 நாடுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அதில், அவிநாசி அருகே வடபரிசார நாடு என்ற பெயரில், தற்போதுள்ள நடுவச்சேரி விளங்கியது. இக்கிராமத்தில் பல கோவில்கள் இருந்தாலும், செவளாபுரி அம்மன் கோவில் தனித்துவம் பெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கற்கோவிலாக விளங்கும் இக்கோவில், வரலாற்றில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த மன்னர்களால், கி.பி., 10ம் நூற்றாண்டில் இக்கோவிலை கட்டியதாக, கல்வெட்டில் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முற்றிலும் கற்கோவிலான இங்கு, 426 கல்தூண்கள் உள்ளன. அவற்றின் மேற்புறத்தில் நான்கு புறமும் சிங்க வாகனம் உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்புறத்தில் இருபுறமும் நீலி நீல கண்டன் என இரு துவாரபாலர்கள், ஆக்ரோஷத்துடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். பிரதான தெய்வமாக, வடக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கும் செவளாபுரி அம்மன், எட்டு கைகளுடன், வனதுர்க்கை ஸ்வரூபத்தில், காக்கும் கடவுளாக காட்சியளிக்கிறாள். கைகளில் கத்தி, கோடாரி, வில், கபாலம், கமண்டலம், பாசம் அங்குசம், அபயம், ஹஸ்தம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஒரு காலத்தில் முற்றிலும் வனப்பகுதியாக இருந்த நடுவச்சேரியை, அப்போது ஆண்ட அரசர்கள் அழித்து விட்டு, பெரு வணிக நகராக உருவாக்கி உள்ளனர். வழிபடுவதற்காக வனதேவதையாக விளங்கும் அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆரம்பத்தில் பொன்கரிய செவளாபுரி அம்மன் என வழங்கப்பட்ட அம்மன்,
இப்போது செவளாபுரி அம்மன் என அழைக்கப்படுகிறாள். கோவிலின் ஸ்தல விருட்ஷமாக 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான "கிளா மரம் உள்ளது.
இதுதவிர, வன்னி மரம், மாமரம், வேப்ப மரம் ஆகிய மரங்களும் கோவில் வளாகத்தில் உள்ளன.

கோவில் சிதிலமடைந்ததால், 1891ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக, சோழன் பூர்வ பட்டயத்தில் குறிப்பு காணப்படுகிறது. கொங்கு வேளாளர்கள், செட்டியார், முதலியார், ஆசாரியார், நாடார், பண்டாரம் ஆகிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு குல தெய்வமாக செவளாபுரி அம்மன் விளங்குகிறாள். செவ்வளைப்பூண்டி என்று கி.பி., 1247ம் ஆண்டு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதால், ஊர் பெயராலேயே, செவ்வளைப்பூண்டி அம்மன் என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில், செவளாபுரி அம்மன் என்றாயிற்று. வரலாற்று சிறப்பு பெற்ற இக்கோவிலில் உள்ள கிளா மரத்தின் கீழ், குறி கேட்கும் வழக்கம் இன்றும் உள்ளது. திருமணம், காதணி விழா, பொன், மண் வாங்குதல் உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களுக்கும் குறி கேட்டு மேற்கொள்வதை, நடுவச்சேரி வட்டார மக்கள் இன்னும் வழக்கமாக வைத்துள்ளனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை காலை மற்றும் மாலையில் 5.00 முதல் 6.00 மணி வரை குறி கேட்கப்படுகிறது. கிளாமரத்தின் கீழ் அமர்ந்து, அதன் அமைதியையும், அதிர்வையும் பக்தர்கள் உணர்கின்றனர். செவளாபுரி அம்மன் தவிர, விநாயகர், கருப்பராயர், சந்தன நாகர், கன்னிமார் போன்ற தெய்வங்களும் கோவிலில் அருள்பாலிக்கின்றனர். அம்மன் சன்னதியை சுற்றிலுமுள்ள சுவரில், கவுமாரி, மனோன்மணி, உமா மகேஸ்வரி, துர்க்கை, விஷ்ணு துர்க்கை ஆகிய பரிவார மூர்த்தி
களும் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் இரண்டாவது செவ்வாய்க்கிழமையில், குண்டம் திருவிழா நடக்கிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி விழா, மாதந்தோறும் பவுர்ணமி பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், மேற்கண்ட விசேஷ நாட்களில், செவாளபுரி அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.

வரலாற்றில் நடுவச்சேரி: அவிநாசியில் இருந்து கிழக்கே நடுவச்சேரிக்கும், வடுகபாளையத்துக்கும் இடையே அமைந்துள்ள செவளாபுரி அம்மன் கோவிலை சார்ந்து, செவ்வளைப்பூண்டி என்ற ஊர் இருந்துள்ளதாக, சோழன் பூர்வபட்டயமும், கி.பி., 11, 12 மற்றும் 13ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களும் கூறுகின்றன. ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன், யவனர்கள் என்போர், ஒரு வணிகப்பெருவழி ஏற்படுத்தி, அதில் நடுவச்சேரியில் சந்தை, வணிகப்பண்ட மாற்று முறையில் தொடர்பு வைத்துள்ளனர். திசையாயிரத்து ஐநூற்றுவர், எண் வகையர், நானாதேசிகன், வளஞ்சியர்கள் போன்ற வணிகக்குடியினர் குடியிருப்புகளும், தெருக்களும், பண்டமாற்று சந்தைகளும் இருந்துள்ளன. இக்கோவிலில் உள்ள ராஜகேசரி குலோத்துங்கன் (கி.பி., 1195-1210), வீரராஜேந்திரன் (கி.பி.,1207-1256) ஆகியோரின் கல்வெட்டுகள், அருகில் உள்ள கோமளவல்லி நாச்சியார் உடனமர் கோதைப்பிராட்டீச்சுரர் கோவிலுக்கு செய்த தானங்களை குறிப்பிடுகின்றன. "நடுவச்சேரியில் சுற்றிலும் இருந்த காட்டை அழித்துவிட்டு, சேர மன்னன் ஒருவன், தனது பெயருக்கு நகரம் உருவாக்க முயன்ற போது, பத்திரகாளி, சேரனிடம் பலி கேட்டது; அவனும், அவ்வாறே கோவில் கட்டி, உத்தம பண்டிதரை அழைத்து, துர்க்கையை நிலை நிறுத்தி, அபிஷேக ஆராதனை செய்து, ஆண்டுதோறும் ஆடு, கோழி, பன்றி ஆகிய முப்பலியோடு, எருமைக்கிடாவும் பலி கொடுக்கும்படி, அங்கு குடியேறும் மக்களுக்கு ஆணை பிறப்பித்தான். மேலும், 300 பொன் கிராமம், முப்பது பொன் சுங்கத்தீர்வை, முப்பது மிடா புன்செய் நிலம், மானியமாக கொடுத்து, நாலு சூலக்கல் நாட்டி வைத்தான், என சோழன் பூர்வபட்டய நூல் கூறுகிறது. அன்று முதல் இன்று வரை, கோவில் முன் பலியிடும் வழக்கம் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், பட்டயம் கூறிய, பலியிடும் முறை நீக்கப்பட்டுள்ளது. நடுவன் என்ற இருளன் பெயரில் அமைந்த ஊரானதால், நடுவன்சேரி என்பது மருவி, இப்போது நடுவச்சேரி என்றாகி உள்ளது. வணிகர்கள் பல்வேறு திசையில் இருந்து வந்து ஒன்று சேர்ந்து வணிக பண்டங்களை மாற்றிக் கொள்ளும் வகையில், நடுவிடமாக விளங்கியதாலும், நடுவச்சேரி என்றாகி விட்டதாக, கிராமத்து பெரியவர்கள் கூறுகின்றனர். மரங்கள் சூழ்ந்த பசுமையான பகுதியில், நடுவச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வன தேவதையாக, காக்கும் கடவுளாக அருள்மழை பொழிந்து வருகிறாள், செவளாபுரி அம்மன்.

பெருவிரல் துண்டிப்பு: அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன், இருபுறங்களிலும் ஆஜானுபாகுவாக காட்சியளிக்கும் துவார சக்திகள் மிகவும் ஆக்ரோஷமானவை. கோவில் நிறுவப்பட்டவுடன், அவ்வழியே செல்லும் மாடுகள், மிரண்டு, நடக்காமல் நின்று விடுமாம். காரணம் புரியாமல், குறி கேட்டதற்கு, துவார சக்திகளின் ஆக்ரோஷம் காரணம் என்பது தெரிந்தது. அதன் காரணமாக, இரு சக்திகளின் கால் பெரு விரல்களை நீக்கியுள்ளதாக, கூறப்படுகிறது. அதற்கு சாட்சியாக, துவார சக்திகளின் சிலைகளில், கால் பகுதியில் பெருவிரல்கள் இல்லை. கோவில் பூசாரி சிவாச்சலம் கூறுகையில், ""மாடுகள் மிரண்டாதல், துவார சக்திகளின் சிலையில் பின்னம் ஏற்படுத்த வேண்டும் என குறி சொல்லப்பட்டது. அதையடுத்தே, இரு சிலைகளிலும் கால் பெருவிரல்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்பின், மாடுகள் மிரளவில்லை என்பது ஐதீகம். இதுபோன்ற துவார சக்திகளின் சிலைகளை வேறெந்த கோவிலிலும் காண முடியாது. அவற்றை வைத்தே, அதன் காலம் ஆயிரம் ஆண்டு களுக்கு மேலானது என்பதை கணிக்க முடியும். கோவில் வளாகத்தில் உள்ள சந்தன நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், திருமண தடை நீங்கும்; குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தை வரம் வேண்டி, கிளா மரத்தில் தொட்டில் கட்டும் பிரார்த்தனையும் நடக்கிறது. ஒரு காலத்தில் தேர்த்திருவிழா பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அதற்காக, நான்கு வீதிகள் கொண்ட அமைப்பு, நடுவச்சேரியில் உள்ளது காலப்போக்கில் தேர் சிதிலமடைந்ததால், திருவிழா நடப்பதில்லை, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று, சூரசம்ஹார வைபவம் நடைபெறுகிறது.திருப்போரூர் ... மேலும்
 
temple news
* இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே இருந்தது திருச்செந்துார். அதை இரண்டாம் படைவீடு என அழைக்கிறோம்.* ... மேலும்
 
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar