வேதாரண்யம்: தலைஞாயிறு நீர்முளை பங்கைச் சேர்ந்த கோடி அற்புத புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெரு விழா நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதியிலுள்ள நீர்முளை பங்கைச் சேர்ந்த கோடி அற்புத புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா நடந்தது. கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. நீர்முளை பங்குத்தந்தை இருதயசாமி அடிகளார் கொடியேற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து, திருப்பலி நிகழ்ச்சியில் கிறிஸ்தவ சமூக தலைவர் ஆல்பர்ட் ஆரோ உள்பட, 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று, பிரார்த்தனை செய்தனர். கடந்த, 30 ஆண்டுகளாக ஆண்டு பெருவிழா நடந்து வருகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து நடக்கும், பத்து நாள் விழாவில், கூட்டு திருப்பலி, திருத்தேரோட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.