பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
12:06
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலில், பக்தர்களின் காணிக்கையாக, 31.6 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், இந்தாண்டு, பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 22ம் தேதி துவங்கி, கடந்த 3ம் தேதி நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து, நேற்று முன்தினம், காஞ்சிபுரம் அறநிலையத் துறை ஆய்வாளர் பார்வதி தலைமையில், மாங்காடு இணை ஆணையர் இளம்பரிதி முன்னிலையில், கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக, 31.6 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இதுதவிர, 10 கிராம் தங்க நகைகள், 235 கிராம் வெள்ளி பொருட்கள் வசூலாகி உள்ளன. உண்டியல் பணம் எண்ணிக்கைக்கு, திருமலை பொறியியல் கல்லூரி, நாட்டு நலப்பணி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.