ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 33 நாட்களுக்கு பிறகு நேற்று, உண்டியல் திறக்கப்பட்டு, ஸ்ரீபர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் கணக்கிட்டனர். இதில், 50 லட்சத்து 44 ஆயிரத்து 655 ரூபாயும், தங்கம் 150 கிராம், வெள்ளி 2 கிலோ 350 கிராம் காணிக்கை கிடைத்தது. கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் உள்ளிட்ட ஊழியர்கள் இருந்தனர்.