வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நேற்று நடந்தது. இதையொட்டி முன்னதாக, அம்மன் கோவில் திருப்பணிகள் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று கடம்புறம்பாடு நடந்தது. பின்னர், கோவிலின் கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி, சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, வழிபாடு செய்தனர்.