Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாஸ்கோவில் ராமாயணம்! துளசியால் அர்ச்சிக்கும் போது ..
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இன்றோடு போகட்டும் திருந்திவிடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
04:06

*அடுத்தவர்களுடைய அந்தரங்கத்தைக் கூட அறிந்து வைத்திருக்கும் நாம், நம்மைப் பற்றி தெரிந்திருப்பது என்னவோ வெறும் பூஜ்யம் தான்.
*அன்றாட வாழ்வில் பணம், பொருள், புகழ் என எத்தனையோ இன்பங்களைத் தேடி ஓடுகிறோம். ஓடும் வேகத்தில் நம்மை நாமே விலகிச் சென்று கொண்டிருக்கிறோம்.
*இன்றைய உலகில் மனிதன் செல்வம், சுகபோகத்தைக் கொண்டே மதிப்பிடப்படுகிறான். உண்மை, அன்பு, அறிவு, ஆற்றல், திறமை இவற்றிற்கெல்லாம் மதிப்பற்றுப் போய் விட்டது.
*நம்மைப் பற்றி தெளிவாக அறிந்தால் மட்டுமே வெற்றிகரமான வாழ்வு பெற முடியும். ஆனால், நம்மை நாமே அறிய முயல்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல.
*மனிதவாழ்வு பிரச்னை நிறைந்தது தான். யாராலும் இதைத் தவிர்க்க முடியாது. பரந்த அறிவோடு வாழ்வைப் புரிந்து கொண்டால் பிரச்னையைக் கண்டு பயம் உண்டாவதில்லை.
*வாழ்வில் எத்தனை பிரச்னை குறுக்கிட்டாலும் சமநிலை இழப்பது கூடாது. இன்றுடன் தவறுகளைத் திருத்திக் கொள். மனதை நேர்வழியில் திருப்பு. ஆற்றலின் இருப்பிடமான கடவுளிடம் சரணடை. உன் உள்ளத்தில் அமைதி குடி கொண்டிருக்கும்.
*பெரும்பாலான பிரச்னைகளுக்கு நாமே காரணமாக இருக்கிறோம். ஆனால், பிறரைக் குறை கூற முயல்கிறோம். இதனால், பிரச்னை தீவிரமாகிறதே ஒழிய தீர்வு உண்டாவதில்லை.
*தற்பெருமை, ஆடம்பரம், படாடோபம் இவையெல்லாம் நம்மை நாம் மறைத்துக் கொள்ள அணியும் முகமூடிகள். சில மனிதர்கள் பணிவு, அடக்கம் போன்ற நற்பண்புகளையும் முகமூடிகளாக அணிந்து கொள்வதுண்டு.
*யாரிடம் ஆணவம் ஆட்டம் போடுகிறதோ, அவரைப் பற்றி ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். அந்தோ பரிதாபம்! அவர் தன்னைப் பற்றி அறியாமல் இருக்கிறார் என்பது தான் அது.
*தன்னை தானே சுய ஆராய்ச்சி செய்யப் பழகினால் முகமூடிகளை களைந்தெறிந்து விட்டு நமக்கு நாமே உண்மையானவர்களாக வாழ முடியும்.
*கடந்த கால கசப்பான அனுபவங்களை எண்ணி, என் வாழ்வில் இப்படி நடந்து விட்டதே என வருந்தாதீர்கள். நிகழ்கால வாழ்வில் சரியான வழியில் நடக்க உறுதி கொள்ளுங்கள்.
*நம் துன்பத்திற்கெல்லாம் காரணம் நாமே. வேறு யாரும் நம்முடைய இப்போதைய நிலைமைக்குப் பொறுப்பல்ல. நாமே நம் விதியை உருவாக்குகிறோம் என்ற தெளிவு வேண்டும்.
*என் பலம் என்ன? பலவீனம் என்ன? என்ற கேள்வியின் விடையறிந்து நாம் நாமாக இருப்பதும், அதற்கேற்ப வாழ்வை அமைத்துக் கொள்வதும் தான் பணிவின் இலக்கணம்.
*பலம், பலவீனத்தை அறிந்தவரிடம் ஆணவம் தலைதூக்குவதில்லை. அவர் மனதில் பணிவு வேரூன்றத் தொடங்கிவிடும். 
-பஜனானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar