பதிவு செய்த நாள்
17
ஜூன்
2013
11:06
ஊட்டி: ஊட்டி நொண்டிமேடு மேல்பகுதி மகாமுனீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் 19ம் தேதி நடக்கிறது. ஊட்டி நொண்டிமேடு மேல் பகுதி மகாமுனீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை துவங்குகிறது. நாளை மாலை 5:00 மணிக்கு புனித நீர்எடுத்து வருதல், 108 வின்னவதி ஹோமங்கள், மகாகணபதி நவக்கிரக ஹோமம், முனீஸ்வர பெருமானுக்கு மூலமந்திர ஹோமங்கள், பூர்ணா குதி, தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு யந்திர ஹதாப்நம அஷ்டபந்தன மருந்து சார்த்துதல் நடக்கிறது. 19ம் தேதி காலை 7:20 மணிக்கு இரண்டாம் காலயாக மகா சங்கல்பம், வேதிகார்ச்சனை, சகல தேவதா அனுக் ஞை, மகா கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், முனீஸ்வரருக்கு மூலிகை திரவிய ஹோமங்கள், நாடிசந்தானம், ஸ்பர்சாகுதி, தீபாராதனை, காலை 9:45 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9:50 மணிக்கு மகா முனீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம் தொடர்ந்து அபிஷேக பூஜைகள் தீபாராதனை, பிரசாத வினியோகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.