குன்னூர்: குன்னூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் 127வது ஆண்டு விழா கோலாகலத்துடன் நடந்தது.குன்னூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் 127வது ஆண்டு கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஊட்டி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டது. பின்னர் திருப்பலி, புதுநன்மை, உறுதிப்பூசுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தினமும் மாலை 5:15 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது.நேற்று நடந்த விழாவில், ஊட்டி முதன்மை குரு அந்தோணிசாமி தலைமையில் ஆங்கிலம், தமிழ் மற்றும் மலையாளத்தில் திருப்பலி நடந்தது. மாலையில் திருத்தேர் பவனி நடந்தது. தேர்பவனி மவுன்ட் ரோடு, பஸ் நிலையம் வழியாக தேவாலயம் வந்தடைந்தது.குன்னூர் வாகன பழுது பார்ப்போர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், சுற்றுலா வாகனம் ஓட்டுனர் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சார்பில், ஆங்காங்கே அந்தோணியார் "சொரூபங்கள் வைக்கப்பட்டிருந்தன. இரவு வாண வேடிக்கை நடந்தது. விழா ஏற்பாடுகள் பங்கு தந்தை ஜோசப், ஜெரோம் உட்பட பங்கு மக்கள் செய்திருந்தனர்.