மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் சர்ச் தேர்த்திருவிழாவில், குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. கடந்த வாரம் ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா துவங்கியது. கோவை கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளி முதல்வர் மரிய ஜோசப் கொடி ஏற்றி வைத்தார். நேற்று காலை நல்லாயன் குருத்துவக் கல்லூரி பேராசிரியர் மெல்க்கியூர் மற்றும் பாதிரியார் மரியசூசை, நோபி ஆகியோர் திருவிழா கூட்டுப்பாடற் திருப்பலியை நிறைவேற்றி, சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கி, மறையுரை ஆற்றினர். பங்கு பாதிரியார் பால் சகாயராஜ் நன்றி கூறினார்.