பதிவு செய்த நாள்
19
ஜூன்
2013
10:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், ராமலிங்க பிரதிஷ்டை விழா, நடந்தது. ராமாயணத்தில், ராவணனை வதம் செய்த ராமனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் நீங்க, தனுஷ்கோடி கடற்கரையில், ராமர், சிவபூஜை செய்ய விரும்பினார். உடனே, அனுமர் கைலாச மலைக்கு சென்று, லிங்கம் கொண்டு வர முயன்றார். ஆனால், கொண்டு வர தாமதம் ஏற்பட்டது. இதனால், சீதையும், ராமரும், கடற்கரை மணலில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தனர். அதன்பின், அனுமன் கொண்டு வந்த, சிவலிங்கத்திற்கு பூஜை செய்தனர். வைணவ மதத்தை சேர்ந்த ராமர், சிவனை பூஜித்ததால்தான், இந்த கோவிலுக்கு, "ராமநாதசுவாமிகோவில் என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக, ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது. நேற்று, ராமர், சுவாமி சன்னதியில், அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடந்தன.