கண்ணன் ஆயர்பாடிக்கு வந்ததும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நவக்கிரக நாயகர்களும் அவரை தரிசிக்க வந்தனர். அவர்களைக் கண்ட யசோதை சனீஸ்வரரை வாசலிலேயே தடுத்து,நீ பார்த்தால் கண்ணனுக்கு ஆகாமல் போய்விடும் வீட்டுக்குள் வர அனுமதி மறுத்தாள். மனம் வருந்திய சனீஸ்வரர் கண்ணனைக் காண நந்தவனம் ஒன்றில் தவம் செய்யத் தொடங்கினார். அவருடைய பக்திக்கு கட்டுப்பட்டு கண்ணன் காட்சியளித்தார். அந்த இடத்தில் சனீஸ்வரருக்கு கோயில் அமைக்கப்பட்டது. கோகிலவாணி எனப்படும் இந்த இடத்தில், சனிதோஷம் நீங்க பக்தர்கள் வழிபடுகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், கோசியிலிருந்து 6 கி.மீ., தொலைவில் நந்தகோபன் பர்ஸானா ரோட்டில் இக்கோயில் அமைந்துள்ளது.