பதிவு செய்த நாள்
24
ஜூன்
2013
10:06
இள்ளலூர்: இள்ளலூர் கங்கையம்மன் கோவிலில், மண்டல அபிஷேக விழா நிறைவடைந்தது. திருப்போரூர் அடுத்த இள்ளலூர் கங்கைஅம்மன் கோவிலில், கிராம மக்கள் சார்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த மே மாதம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, தினமும் மாலை மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மண்டல பூஜை நிறைவு விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. இரவு, அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.