பதிவு செய்த நாள்
27
ஜூன்
2013
10:06
ஈரோடு: ஈரோடு அடுத்த சித்தோடு பாலதண்டபாணி கோவில் கும்பாபிஷேகம் விழா, 23ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. கடந்த, 24ம் தேதி, சாந்தி ஹோமம், திசா ஹோமமும், 25ம் தேதி காலை, யாகசாலை, அலங்காரம், பரிவார தேவதா கலாகர்ஷணம், விக்னேஸ்வர பூஜை, மஹாசங்கல்பம் நடந்தது. நேற்று, விநாயகர் வழிபாடு, மங்கள இசை, பூதசோதனம், இரண்டாம் கால யாக பூஜை, கோபுரங்களுக்கு கலசம் வைத்தல், நடந்தது. இன்று காலை, 5.30க்கு விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. இரவு, 8 மணிக்கு "தலை எழுத்தை மாற்றும் தமிழ்க்கடவுள் முருகன் என்ற தலைப்பில், மங்கையற்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நாளை (28ம் தேதி) காலை, 5.30க்கு விநாயகர் வழிபாடு, முருகனுக்கு ஆறாம்கால யாக பூஜை, மூல மூர்த்திகளுக்கு ரஷாபந்தனம், ஹோமம் நடக்கிறது. காலை, 8.45க்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு, 9.25க்கு ராஜகோபுரம், விமானங்கள் சமகால மஹா கும்பாபிஷேகம், நடக்கிறது. மாலை, 6 மணிக்கு பாலதண்டபாணி சுவாமிக்கு மஹாபிஷேகம், அலங்காரம், வள்ளி, தேவசேநா சமேத கல்யாண சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவில் ப்ரகார உற்சவம் நடக்கிறது.