திருவாப்புடையார் கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2013 10:07
மதுரை: மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோயிலில் ஜூலை 14 காலை 9.30 மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. கோயில் பேஷ்கார் பகவதி கூறியதாவது: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரூ.ஒரு கோடியில் புரனமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. தெப்பக்குளம் சுத்தப்படுத்தப்படுகிறது. பழமையான சுவாமி, அம்மன் கொடிமரங்களை அகற்றி விட்டு, சுவாமி கொடிமரம் 32 அடி உயரத்திலும், அம்மன் கொடிமரம் 30 அடி உயரத்திலும் தேக்குகட்டையால் அமைக்கப்படுகின்றன. ஜூலை 7 காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்மன் கொடிமரங்கள் பிரதிஷ்டை செய்யப்படும். கோயில் மேல்பகுதியில் தட்டோடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 1997ல் கும்பாபிஷேகம் நடந்தது. அம்மன் கோயில் வளாகத்தில் யாகசாலைக்கான மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன, என்றார்.