சிவகங்கை: சிவகங்கை, பிள்ளைவயல் காளியம்மன் கோயில், பூச்சொரிதல் விழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. சிவகங்கையில்,பிரசித்தி பெற்ற பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று காப்பு கட்டுடன் துவங்கியது.மாலை 5 மணிக்கு, பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி செலுத்தினர். இரவு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். எட்டாம் நாளான ஜூலை 12 காலை 10.30 மணிக்கு, பூச்சொரிதல் விழா நடைபெறும். பெண்கள், பூத்தட்டுகளை ஏந்தி, வலம் வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்வர். ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.