பதிவு செய்த நாள்
06
ஜூலை
2013
10:07
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி பெரியதளவாய் மாடசுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கால்நாட்டுதல் வைபவம் நடந்தது. ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் அருகே பெரியதளவாய் மாடசுவாமி கோயில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கால்நாட்டுதல் வைபவம் நடந்தது. இதனை தொடர்ந்து வரும் 12ம் தேதி காலை 4.30 மணிக்கு மேல் மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக பூஜை, தனபூஜை, மாலை தீர்த்த சங்கிரகணமும், இரவு வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம் ஆகியன நடக்கிறது. 13ம் தேதி கும்பபூஜை, யாகபூஜை, தளவாய் மாடசுவாமி ஜலவாசம் செய்து, சயனவாசம் செய்தலும், இரவு யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தனம், நாடிசந்தானம் ஆகியன நடக்கிறது. கும்பாபிஷேக நாளான வரும்14ம் தேதி 7 மணிக்கு மேல் மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பெரியதளவாய் மாடசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 11 மணிக்கு மகா அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் கும்பாபிஷேக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.