பதிவு செய்த நாள்
10
ஜூலை
2013
11:07
சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ஆடி அமாவாசை மற்றும் ஆடி கிருத்திகை சுற்றுலாவிற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள், கலந்து கொள்ளலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பொதுமக்கள் விருப்பத்திற்கேற்ப, அவ்வப்போது, அம்மன் கோவில் சுற்றுலா, ஸ்ரீராமநவமி சுற்றுலா என, பல்வேறு சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், ஆடி அமாவாசை சுற்றுலா நடத்தப்படுகிறது.
ஆடி அமாவாசை சுற்றுலா: ஆடி அமாவாசை அன்று, சென்னையிலிருந்து சுற்றுலாப் பயணிகள், ராமேஸ்வரம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். முன்னோருக்கு திதி கொடுக்க விரும்புவோர், அங்கு சென்று கொடுக்கலாம். இவ்வாண்டு, ஆடிக் கிருத்திகை சுற்றுலா பஸ், அடுத்த மாதம், 4ம் தேதி புறப்படுகிறது. 7ம் தேதி காலை, 6:00 மணிக்கு, சென்னை வந்தடைகிறது. இதற்கு கட்டணமாக, பெரியவருக்கு, 2,600, சிறுவருக்கு 2,200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் போக்குவரத்து, தங்கும் வசதி, வழிகாட்டி சேவை ஆகியவை அடங்கும்.
ஆடி கிருத்திகை சுற்றுலா: ஆடி கிருத்திகை சுற்றுலா, இவ்வாண்டு முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் பங்கேற்போர், வரும், 31ம் தேதி காலை, 7:00 மணிக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திலிருந்து, அழைத்து செல்லப்படுவர். காலை, 11:00 மணிக்கு கிளம்பி, இரவு, 7:30 மணிக்கு, சென்னை வந்தடையலாம். இதற்கு கட்டணமாக, 725 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 044-25384444, 25383333, 25389857, ஆகிய போன் எண்களை, தொடர்பு கொள்ளலாம்.