லக்னோ: மகாபல்லிபுரம் கடற்கரை கோயிலை புனரமைப்பது போன்ற சவாலான பணியாக கேதார்நாத் கோயிலை புனரமைக்கும் பணி அமையும் என கட்டிடவியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார். மகாபலிபுரம் கடற்கரை கோயிலை வங்காள விரிகுடா கடல் தாக்கியதை போன்று மந்தாகினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு கேதார்நாத் கோயிலை சேதப்படுத்தி உள்ளதாகவும் கோயிலை ஆய்வு செய்த பின் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு பின்புறம் ஆறு செல்வதால் அதற்கு தகுந்தாற் போல் கோயில் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உத்திரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் இந்திய கட்டடவியல் ஆராய்ச்சி துறை தலைவர் பி.ஆர்.மணி இதனை தெரிவித்துள்ளார்.