பதிவு செய்த நாள்
10
ஜூலை
2013
11:07
மதுரை: துவரிமான், ஈஸ்வரர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வருஷாபிஷேகம், ஜூலை 14 ல் நடக்கிறது. இக்கோயில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. பக்தர்கள் முயற்சியால், ஆவர்தன பிரதிஷ்டை செய்யப்பட்டு, 2003ல், கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, பத்தாவது வருஷாபிஷேகம் நடக்கிறது. மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வருக்கும், பரிவார தெய்வங்களுக்கும், காலை 6 மணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் சாத்தப்படும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தலைவர் கருமுத்து கண்ணன், செயலாளர் வெங்கட்ராமன் செய்துள்ளனர்.