நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இன்று (10ம் தேதி) அய்யனார் கோவிலில் ஊரணி பொங்கலிடுதல், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 4:00 மணிக்கு காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை சிறப்பு தீபாராதனை, சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் 19ம் தேதி மதியம் 12.30 மணிக்கு நடக்கிறது. 20ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆதிமூலம், துணைத் தலைவர் ராஜாராமன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் முருகையன் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.