பதிவு செய்த நாள்
10
ஜூலை
2013
11:07
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருகே சா.அய்யம்பாளையத்தில் மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் யாகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சா.அய்யம்பாளையத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அறக்கட்டளை சார்பில், உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் 1,008-வது மகா யாகமும், சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் குருசாமி ராஜமாணிக்கம் தலைமையில், சிறுவாச்சூர் கவிஞர் சக்திதாசன், திருச்சி ஆனந்தன், அம்மாசி ஆகியோர் சிறப்பு வழிபாடு செய்தனர்.நிகழ்ச்சியில் அய்யம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் சிங்காரம், கவுன்சிலர் சடையன், துணைத்தலைவர் மாரியப்பன், ஆசிரியை தேவநாயகி, அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜசேகர், கோவிந்தராஜ், வெங்கடேசன், பெரியசாமி மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.