காரிமங்கலம்: காரிமங்கலம் வெள்ளையன் கொட்டாவூரில், மாரியம்மன் கோவில் திருவிழா நாளை (ஜூலை 10) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. நாளை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், 11ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பக்தர்கள் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 12ம் தேதி வெள்ளையன் கொட்டாவூர் மாரியம்மன் கோவிலிருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து கொண்டு ராமசாமி கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சியும், மாலையில் வாணவேடிக்கையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.