புதுச்சேரி: வைத்திக்குப்பம் அக்கா சுவாமி கோவிலில், 143வது மகா குருபூஜை நாளை மறுநாள் (14ம் தேதி) நடக்கிறது. குரு பூஜை விழா, நாளை (13ம் தேதி) மாலை 6.30 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. வரும் 14ம் தேதி குரு பூஜை நடக்கிறது. அன்று காலை 4:00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும், 8:45 மணிக்கு அக்கா சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, குருபூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி செல்வம், அர்ச்சகர்கள் எல்லுசாமி, சிவசந்திர கணேஷ் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.