பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
11:07
ஆழ்வார்குறிச்சி;திருமலையப்பபுரம் மங்கை நாயகி அம்பாள் கோயிலில் முளைக்கொட்டும் திருவிழா துவங்கியது.திருமலையப்பபுரம் மங்கை நாயகி அம்பாள் கோயிலில் ஐந்து சமுதாயத்தின் சார்பில் ஆண்டுதோறும் முளைக்கொட்டும் திருவிழா நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று முளைபோடுதல், தீப ஆராதனை நடந்தது.இன்று (17ம் தேதி) இரவு 9 மணிக்கு வெள்ளான் செட்டியார் சமுதாய திருநாள் நடக்கிறது. நாளை (18ம் தேதி) இரவு 9 மணிக்கு சேனைத் தலைவர் சமுதா திருநாளும், வரும் 19ம் தேதி இரவு 9 மணிக்கு விஸ்வகர்ம சமுதாய திருநாளும், 20ம் தேதி இரவு 9 மணிக்கு வணிக வைசியர் சமுதாய திருநாளும், 21ம் தேதி இரவு 9 மணிக்கு யாதவர் சமுதாய திருநாளும், 22ம் தேதி மதியம் 1 மணிக்கு கும்பாபிஷேகம், மாலை 6 மணிக்கு கும்பாபிஷேக தீப ஆராதனை, மாலை 7.30 மணிக்கு ஆடிமாத பவுர்ணமி பூஜை வழிபாடு, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.23ம் தேதி காலை 8.30 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், 11 மணி அலகு தீர்த்தம் எடுத்து வருதல், மதியம் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 3 மணிக்கு கும்பம் வீதிவலம் வருதல், நள்ளிரவு 12 மணிக்கு அலகு தீர்த்தம் கொண்டு வருதல், 1 மணிக்கு அலங்கார தீப ஆராதனை, 2 மணிக்கு அம்பாள் வீதிவலம் வருதல். மாலை 4 மணிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது.24ம் தேதி காலை 5.30 மணிக்கு படைப்பு, தீபாராதனை, 6.30 மணிக்கு அம்பாள் ராமநதியில் முளை கொட்டி வருதல், காலை 8 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.ஏற்பாடுகளை ஐந்து சமுதாய விழாக்குழுவினர் செய்துள்ளனர்.