ஆய்க்குடி ஷீரடி சாய்பாபா கோயிலில் வரும் (22ம் தேதி) குரு பூர்ணிமா விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2013 11:07
தென்காசி;ஆய்க்குடி ஷீரடி சாய்பாபா கோயிலில் வரும் (22ம் தேதி) குரு பூர்ணிமா விழா நடக்கிறது. தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி ஷீரடி சாய்பாபா கோயிலில் வரும் திங்கள்கிழமை(22ம் தேதி) குரு பூர்ணிமா விழா நடக்கிறது. இதைமுன்னிட்டு அன்று காலை 8 மணிக்கு உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் நான்கு வேளை ஆரத்தி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. யாகம் மற்றும் அன்னதானத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் அதற்கான பெருட்களை தென்காசி சுவாமி சன்னதியில் உள்ள கோயில் அலுவலகத்தில் 21ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டனர். விழா ஏற்பாடுகளை சுப்புலெட்சுமி துரைசுவாமி கல்வி மற்றும் தர்ம அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.