பதிவு செய்த நாள்
20
ஜூலை
2013
10:07
செய்யூர்: அம்மணம்பாக்கம், தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ளது, அம்மணம்பாக்கம் கிராமம். இங்கு பழமை வாய்ந்த தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. பழுதடைந்திருந்த இக்கோவில், 8 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, 17ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, தன பூஜை, கோ பூஜையும், மாலை 5:00 மணிக்கு, முதற்கால யாகசாலை பூஜைகளும், 18ம் தேதி காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசால பூஜைகளும் நடந்தன. கடந்த 19ம்தேதி காலை 7:30 மணிக்கு, யாத்ராதானம் கலச புறப்பாடும், 9:30 மணிக்கு கோபுர கும்பாபிஷேகமும், 10:00 மணிக்கு தண்டுமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மஹா அபிஷேகமும் நடந்தது.