பதிவு செய்த நாள்
20
ஜூலை
2013
10:07
இளையான்குடி: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு , அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு , அம்மனுக்கு சிறப்பு அபஷேகம்,பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதல் பெண் பக்தர்கள் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி , வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் ,காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , பூஜைகள் நடந்தன.பெண்கள் நெய் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். இளையான்குடி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் அம்மனை வழிபட்டுச் சென்றனர். சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. மடப்புரம் காளி கோயிலில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. பெண்கள் மஞ்சள் புடவையுடன் வேண்டுதல் செய்தனர். உச்சி கால பூஜையில் கோயில் வளாகம்,சுற்றுப்பிரகாரம் முழுவதும் பக்தர்கள் நிரம்பி இருந்தனர். காளி, அய்யனார், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மதுரை,சிவகங்கையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோயிலுக்குள் ஏற்பட்ட நெருக்கடியை போலீசாரால் சமாளிக்க முடியவில்லை.