கள்ளக்குறிச்சி நீலமங்கலம் துர்க்கையம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 8:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்ணியாகவசனம், கலச ஸ்தாபனம், 108 பால் குட ஆவாஹனம் மற்றும் பூஜைகள் செய்தனர். பின்னர், துர்க்கை அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது.