பதிவு செய்த நாள்
22
ஜூலை
2013
10:07
நகரி: நகரி அடுத்துள்ள தேசம்மன் கோவிலில், ஆண்டு ஆடி உற்சவ விழா சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. சித்தூர் மாவட்டம், நகரி டவுனில் இருந்து, நாகலாபுரம் செல்லும் சாலையில், டி.ஆர்.கண்டிகை கிராமத்தில், கண்ணொளி வழங்கும் தெய்வமான தேசம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம், முதல் வார செவ்வாய்கிழமை முதல், தொடர்ந்து, 10 வாரங்கள் அம்மனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். அப்போது, உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆடி மாத சிறப்பையொட்டி, அதிகாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கான கோவில் திறந்து இருக்கும். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி தலைவர் சி.கே.தயாநிதி உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.