பதிவு செய்த நாள்
22
ஜூலை
2013
10:07
ஆர்.கே.பேட்டை: கந்ததுணி மாரியம்மன் மற்றும் கொள்ளாபுரியம்மன் கோவில்களில், இன்று, ஆடி மாத பவுர்ணமி மற்றும் பால்குட விழா நடக்கிறது. ர்.கே.பேட்டை அடுத்த, மடுகூர் கிராமத்தில், கடந்த, 2011ல், கந்ததுணி மாரியம்மன் கோவில் சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. ஆடி மாதம், பவுர்ணமியை ஒட்டி, மூன்றாம் ஆண்டு பால்குட விழா, கந்ததுணி மாரியம்மன் கோவிலில் இன்று நடக்கிறது. இதேபோல், கொள்ளாபுரியம்மன் கோவிலிலும் நடக்கிறது. பால்குட விழாவை ஒட்டி, பெண்கள் நேற்று முன்தினம் முதல், கோவிலில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை, 9:00 மணியளவில், ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்படவுள்ளது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் வீதியுலாவும், அதைத் தொடர்ந்து பக்தி நாடகமும் நடக்க உள்ளது. அம்மையார்குப்பம்: இதே போல், ஆடி பவுர்ணமி தினத்தை ஒட்டி, அம்மையார் ப்பம் பொன்னியம்மன் கோவில் மற்றும் காமாட்சியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. அம்மனுக்கு தீபாராதனை செய்யும் அதே நேரத்தில், கோவில் வெளி பிரகாரத்தில், பவுர்ணமி நிலவுக்கு தீபாராதனை நடைபெறும். கோபுரத்தையும், நிலவையும் ஒரு சேர தரிசனம் செய்யும் இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.