புதுச்சேரி: ஞானமேடு சொர்ண பைரவர் கோவில் சேஷா ஆசிரமத்தில், குரு பூர்ணிமா-ஸ்ரீ வியாஸ பூஜை இன்று (22ம் தேதி) நடக்கிறது. புதுச்சேரி-கடலூர் சாலையில், இடையார்பாளையம் அருகே உள்ள ஞானமேடு கிராமத்தில் சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இங்குள்ள சேஷா ஆசிரமத்தில் இன்று (22ம் தேதி) மாலை 4:00 மணி முதல் 6:00 வரை, வியாஸ பூஜை, குரு பாதுகா பூஜை, ஷோத்திரி சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, முத்துகுருக்கள் செய்துள்ளார்.