சென்னை: ஆடிகிருத்திகையை முன்னிட்டு கந்தகோட்டம் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், புஷ்பாலங்காரம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. முருகன் கோவில்களில், நாளை ஆடி கிருத்திகை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, சென்னை ராசப்ப செட்டி தெருவில் உள்ள கந்தகோட்டத்தில், அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. காலை 10:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. மதியம் 1:30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அங்கி சாத்தப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு ரம்யா முரளிகிருஷ்ணனின் இன்னிசை கச்சேரியும், அதன்பின் சிறப்பு சொற்பொழிவும் நடக்கின்றன.