பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், அஸ்வினி நட்சத்திரத்தையொட்டி, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு பாலவிநாயகர், முருகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு, அஷ்டமியை முன்னிட்டு கால பைவரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கோவிலில் உள்ள 63 நாயன்மார் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. என்.ஆர். காங்., பிரமுகர் பொன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்கள் சங்கரநாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.