மடத்துக்குளம் அருகே, கே.டி.எல் மில் பகுதியில் மாலையம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் உள்ள சித்திவிநாயகர், முருகன், வேணுகோபால், விஸ்வநாதர் விசாலாட்சி, நவக்கிரகங்கள், சனீஸ்வரர், பரிகார சுவாமிகளுக்கு ஆடிப்பெருக்கு அன்று சிறப்பு அபிஷேகபூஜைகள், அலங்காரங்கள், ஆராதனைகள் நடக்கின்றன. அன்று காலை 8.00 மணிக்கு மங்களவாத்தியம், 9.00 மணிக்கு அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுக்க புறப்படுதல், பகல் 12.00 மணிக்கு அமராவதி ஆற்றில் அன்னதானம், மாலை 5.00 மணிக்கு ஆபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.