புதுச்சேரி: புனித புதுமை அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு, நேற்று இரவு ஆடம்பர தேர்பவனி நடந்தது. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள புதுமை அந்தோணியார் ஆலய திருவிழா 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கூட்டுத்திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று புதுமை புனிதரின் திருவிழா நடந்தது. காலை 7:00 மணியளவில், கூட்டுபாடற் திருப்பலி நடந்தது. கடலூர் உயர்மறைமாவட்ட பேராயர் அருளானந்தம் கலந்து கொண்டார். மாலை 6:30 மணியளவில் ஆடம்பர தேர்பவனி நடந்தது. அரசு கொறடா நேரு எம்.எல்.ஏ., காங்., சிவக்கொழுந்து கலந்து கொண்டனர். தேர்பவனியில் ஆலய பங்குதந்தை குழந்தைசாமி, துணை பங்குதந்தை ஆரோக்கியசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.