பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:07
திருச்செந்தூர்: திருச்செந்தூர் மேலத் தெரு யாதவர் சமுதாய சுடலைமாடசுவாமி கோவில் கொடைவிழா நேற்று நடந்தது.திருச்செந்தூர் மேலத் தெருயாதவர் சமுதாய சுடலைமாடசுவாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நேற்றுமுன் தினம் மாலை தீர்த்தவாரி எடுத்துவரப்பட்டது. இரவு 8.30 மணிக்கு சுவாமிக்கு கும்பம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு வில்லிசையும் குடியழைப்பு தீபாராதனையும் காப்புகட்டுதலும் நடந்தது. கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று மதியம் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் இரவு சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் இன்று அதிகாலை 4.00 மணிக்கு படைப்பு தீபாராதனையும் 7.00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. கொடை விழாவில் திருச்செந்தூர் டவுண் பஞ் சேர்மன் சுரேஷ்பாபு, முருகன் கோவில் தக்கார் கோட்டைமணிகண்டன், விவேகா கன்ஸ்ட்ரக்ஷன் இஞ்சினியர் நாராயணன், வெங்கடேஷ், நகர யாதவ வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் வைரம், துணைத்தலைவர் ஆறுமுகம், துணைச்செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் செயலாளர் மயில்மணி, கணேஷ் ஏஜென்சி நம்பிராஜ், வீரபாகு மஹால் வீரபாகு, வேல்குமார் சில்க் எம்போரியம் ராதாகிருஷ்ணன், அனில் ரெடிமேட்ஸ் நட்டார், சரண்யா ரெடிமேட் மந்திரம், சாந்தி ராதாகிருஷ்ணன், ரமேஷ், ஹோட்டல் அர்ச்சனா கிட்டன், தேவஸ்தான கேண்டீன் ராஜேஷ்வரன், வீரக்கண், செங்கண்ணன், கந்தன், கூல்மாஸ்டர் வெங்கடேஷ், லெகஷ்மி சூ மார்ட் பன்னீர்செல்வம், கண்ணன், ஸ்ரீராம் எலெக்ட்ரானிக்ஸ் சுடலை, அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் வினோத், நியுஸ் ஏஜெண்ட் பெரியசாமி, கிட்ஸ் ரெடிமேட்ஸ் ஐயாக்குட்டி, லெஷ்மி சைக்கிள் மார்ட் சுடலை, தேமுதிக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நகர அவைத்தலைவர் ராமன், கவுன்சிலர் காளிதாஸ், ஏஒன் புக் ஸ்டோர் கார்த்திகேயன், விஎஸ்பி சிவம் டீ ஸ்டால் அந்தோனிராஜ், வேலாயுதம், முத்து, செந்தூர் டெக்கரேஷன் குமார், நெல்லையப்பன், டிசிடபுள்யூ ஆறுமுகம், அரிசிக்கடை வேலாயுதம், கவிதா ரெடிமேட் நல்லக்கண்ணு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.