Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புத்தூர் கோயிலில் யானைக்கு ... கஞ்சனூர் கோவிலில் சந்தனக்காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ஆடி விழா: ஆக.,1 ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
10:07

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட விழா, ஆக., 1 ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டாள் கோயிலில் இன்று, "தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல் நிகழ்ச்சி , நாளை (ஜூலை 31) மாலை, "சேனை முதல்வர் புறப்பாடு நடக்கிறது. ஆக.,1 காலை 8.30 மணிக்கு, கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி, நான்கு ரதவீதிகள் சுற்றி, கொடிமரத்தில் ஏற்றப்படும். இரவு 11 மணிக்கு, பதினாறு வண்டி சப்பரத்தில், ஆண்டாள், ரெங்க மன்னார் பவனி நடக்கும். ஆக., 5 காலை 9 மணிக்கு, ஆடிப்பூர மண்டபத்தில் பெரியாழ்வார் எழுந்தருள, பெரிய பெருமாள், சுந்தரராஜன், திருவேங்கட முடையான், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு, மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு, ஐந்து கருட சேவையில், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும்; ரெங்க மன்னார் பெரிய கருட வாகனத்திலும், பெரியாழ்வார் சின்ன அன்னவாகனத்திலும் வீதி உலா வருவர். ஆக., 7 இரவு 8 மணிக்கு, கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனநிலையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆக., 9 ஆடிப்பூரம் அன்று அதிகாலை ஏகாந்த திருமஞ்சனம், காலை 8.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவின் கடைசி நாள் மாலை, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு புஷ்பயாகம் நடக்கும். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன், கோயில் ஊழியர்கள், ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar