பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விசேஷ நாள். ஆனால், சென்னை பீர்க்கங்கரணை சீனிவாசநகர் காரணீஸ்வரர் கோயில் காலபைரவருக்கு வியாழக்கிழமை வழிபாடு நடக்கிறது. கிரகதோஷம் நீங்குவதற்காக பைரவருக்கு அரளிமாலை சாத்தி அரிசிப் பொரி, அவல் நைவேத்யம் செய்து சந்நிதியை எட்டுமுறை வலம்வந்து வழிபடுகின்றனர். கடன் நிவாரணம், வழக்கில் வெற்றி பெற தயிர்சாதம் நைவேத்யம் செய்து, வடைமாலை சாத்துகின்றனர். பெருங்களத்தூர் ரயில்வேகேட் அருகிலிருந்து பிரியும்சாலையில் பீர்க்கங்கரணை உள்ளது.