கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு கிழக்கில் தளியல் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இங்கு நோய் நீங்க வேண்டி பக்தர்கள் மண்டை அப்ப வழிபாடு செய்கின்றனர். பாசிப்பயறும், சர்க்கரையும் கலந்த பூரணத்தை அரிசிமாவுக்குள் வைத்து, அதன் மீது மனிதமுகம் போல கண்,காது, மூக்கு வைத்து அப்பம் தயாரிப்பர். இதற்கு மண்டையப்பம் என்று பெயர். தலையில் ஏற்படும் எந்த நோயும் இந்த வழிபாட்டால் குணமாகும் என்று நம்புகின்றனர்.