தினமும் செய்யலாம். பெற்றோரைத் தெய்வமாக போற்றிய சிரவணன் தினமும் பாதபூஜைசெய்யும் வழக்கம் கொண்டவன். அவனுடைய பெற்றோர் சேவையில் மனதைப் பறி கொடுத்ததாக காந்திஜி சத்தியசோதனை நூலில் குறிப்பிடுகிறார். பெற்றோருக்கு பாதசேவனம் செய்த, ஹரிதாசருக்காக பண்டரிநாதன் செங்கல் மீது காத்துநின்ற கதையை பண்டரிபுரம் வரலாற்றில் படிக்கிறோம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளின் போதாவது, மணமக்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்வது அவசியம்.