ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் கர்ப்பிணிக்கு நடத்தப்படும் சடங்கு இது. கைநிறைய கண்ணாடி வளையல்களை சுமங்கலிப்பெண்கள் பெண்ணுக்கு அடுக்கி நலுங்கு செய்வர். அதனால், உண்டாகும் கலகல சத்தம் தாய், சேயை ஒன்று சேர்க்கும் பாலமாக இருக்கிறது. இதனால், குழந்தையின் கிரகிப்புத்திறன் வளர்கிறது. ஒரு பெண்ணுக்கு தாய்மையின் மேன்மையை உணர்த்தும் விதத்தில் வளைகாப்பு சடங்கு அமைகிறது.