பழநி:ஆடிக்கார்த்திகையையொட்டி பழநி கோயிலில் மலர் காவடிகளுடன் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். வின்சில் செல்ல 4 மணி நேரம் காத்திருந்தனர். ஆடிக்கார்த்திகையையொட்டி அதிகாலை 4 மணிக்கு மலைகோயில் சன்னதி திறக்கப்பட்டது. மலர் காவடி கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது ஆடிக்கார்த்திகையின் சிறப்பாகும். கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் மலர் காவடிகளுடன் வந்து சுவாமிதரிசனம்செய்தனர். படிப்பாதையில் பக்தர்கள் படிபூஜை செய்தனர். மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ரோப்கார் இயங்காததால் மூன்று வின்சுகள்மட்டும் இயங்கியது. வின்சில் செல்ல பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்தனர். மலைக்கோயிலில் பொது தரிசன வழியாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருஆவினன்குடி கோயிலில் இருந்து குழந்தை வேலாயுதசுவாமி மயில்வாகனத்திலும், பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை வெள்ளி மயில் வாகனத்திலும் எழுந்தருளி, திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.