ஆடி அசைந்து வந்த ஆடி தேர்: மாரிபுத்தூரில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2013 10:08
மதுராந்தகம்:மாரிபுத்தூர் செல்லியம்மன் கோவில் ஆடிதிருதேர் உற்சவ விழா கோலாகலமாக நடந்தது.மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் பிடாரி செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆடி திருத்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெறும்.இந்த ஆண்டு ஆடி மாதத்தை முன்னிட்டு, ஆடிதிருத்தேர் விழா கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியோடு துவங்கியது. 30ம் தேதி இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேர் வீதியுலாவும் நடந்தது. 31ம் தேதி காலை 10:00 மணிக்கு பகல் திருத்தேர் வீதியுலாவும் கோலாகலமாக நடந்தது.நேற்று காலை 8:30 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், பகல் 2:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் ஆராதனைகளும் நடந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிபட்டனர்.