சின்னமனூர்:சின்னமனூர்-சீப்பாலக்கோட்டை ரோட்டில் உள்ள கஸ்தூரி நகரில், ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பகவதியம்மன் கோயிலுக்கு பூமிபூஜை போடப்பட்டது. சின்னமனூர் பகவதியம்மன் கோயில் நிர்வாகம் மற்றும் பாரதமாதா டிரஸ்ட் சார்பில் கட்டப்படும் இக்கோயிலின் பூமி பூஜை, பரம்பரை பூசாரி கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது. கேரளாவை சேர்ந்த ஜெயபிரகாஷ் சுவாமிகள் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். பூஜையில் சிவதாஸ் சுவாமிகள், ஏராளமான பக்தர்களும் பெண்களும் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.