பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
காவேரிப்பபட்டணம்: காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மதியம், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6 மணிக்கு அம்மன் பிரகார உற்சவம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
*தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசையை ஒட்டி இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. காலை, 10 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், மதியம், 1 மணிக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 9 மணிக்கு சாமபூஜை நடந்தது.ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் தண்டபாணி, சக்திவேல் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
*தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை ஒட்டி துர்க்கை அம்மனுக்கு பால் அபிசேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மாலை பெண்கள் துர்க்கை அம்மனை தூக்கி கொண்டு கோவிலை சுற்றி வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவாரி சேவ சங்க தலைவர் மணிவண்ணன், செயலாளர் சரவணன், பொருளாளர் சின்னதுரை மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
*தர்மபுரி எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், அங்காளம்மன் கோவில், கீழ்த்தெரு தாச ஆஞ்சநேயர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், அரூர் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், கெரகேடஅள்ளி வீரதீர ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கனவாய் ஆஞ்சநேயர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.